Wednesday, November 16, 2011

என்னை மனப்பாயா???


உன்னைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில்,
முகிலை மழைத்துளியாய்
மாற்றியது வான்...

உன்னைக் கண்ட பூரிப்பில்,
மழைத்துளியை வானவில்லாய்
மாற்றினான் ஆதவன்...

உன்னைத் தீண்டிய துளியை,
கண்டுபிடித்து முத்தாய்
மாற்றியது சிப்பி...

உன்னைக் கவரத் தான்,
பூரண அழகைக் கொண்டு
அர்ச்சிக்கிறான் சந்திரன்...

உன்னை மனக்கதான் எவ்வளவு
போட்டிகள் பார்த்தாயா???

என்னால் அவற்றிற்கு
முன்னால் நிற்கமுடியாதெனினும்,
என் வாழ்கையை உன்னோடு பகிர்ந்துகொள்ள
எண்ணி கேட்கிறேன்,
என்னை மனப்பாயா??? 


Thursday, November 10, 2011

அன்பே...



அன்பே,

உன் கோபமும் இனிது தானடி,
உனது நேசத்தைத் தெரிவிக்கும் போது...

உன் வெட்கமும் வெகுமதிதானடி,
உனது விருப்பத்தை வெளிக்கொணரும் போது...

உன் அதட்டலும் வெகுமதிதானடி,
உனது அக்கறைக்கு விளக்காகும் போது...

உன் சிணுங்கலும் செல்லமானதடி,
உனது சிறுபிள்ளைதனத்தை வெளிக்காட்டும் போது... 

உன் பிரிதலும் சுகம்தானடி,
உன்னைப் புரிதலுக்கு விதையாகும் போது...

உன் கண்ணீரும் அழகானதடி,
உனது காதலுக்குக் கண்ணாடியாகும் போது...

Tuesday, November 1, 2011

நிணைவுகள்



நண்பா,

விவரம் தெரிந்த நாள் முதல்
ஒன்றாக விளையாடி மகிழ்ந்த நிணைவுகள்,

தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க 
ஒன்றாக தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்ற நிணைவுகள்,

விடுமுறை நாட்களில் 
ஒன்றாக சுற்றித் திரிந்த நிணைவுகள்,

பிறந்தநாள் கொண்டாட்டங்களை 
ஒன்றாக சேர்ந்து குதூகலித்த நிணைவுகள்,

 நண்பர்கள் எல்லோரும் 
ஒன்றாக கூடி பேசிக்களித்த நிணைவுகள்,
 
பண்டிகைகளைக் கொண்டாட 
ஒன்றாக நம்மூருக்கு பயணித்த நிணைவுகள்,
 
நீ என்னை விட்டுப் பிரிந்தாலும் 
என் நினைவுள்ளவரை நீங்காது 
நினைத்துக் கொண்டிருப்பெனடா... 



Monday, October 10, 2011

கண்ணீர்






உன் ஒருத்துளி கண்ணீரில்
உணர்ந்தேனடி,
என் மீது நீ கொண்டுள்ள
காதலை...

Friday, September 2, 2011

காதல்



நான் பார்ப்பது யாவும் 
உன் முகமாய்த் தெரிவதும், 

நான் கேட்பது யாவும்
உன் குரலாய்க் இருப்பதும், 

நான் சுவாசிப்பது யாவும்
உன் வாசமாய் உணர்வதும், 

நான் தொடுவது யாவும்
உன் விரலாய் மாறும் 
விந்தைக்கு பெயர் தான் காதலோ???? 

Thursday, August 25, 2011

மறுக்கிறது என் மனம்...




என்னடி பெண்ணே செய்தாய் என்னை,
உன்னை நினைப்பதை தவிர 
மற்ற எதையும் செய்ய 
மறுக்கிறது என் மனம்... 

Wednesday, August 10, 2011

யாரடி நீ எனக்கு...




தனிமையில் நான் தவித்தபோது 
துணையாய் வந்தவள் நீ...

வெறுப்பில் நான் விரக்தியடைந்தபோது 
என்னை வெளி கொணர்ந்தவள் நீ...

மனப்புழக்கதில் நான் புழம்பியபோது 
கைகோர்த்து ஆறுதல் சொன்னவள் நீ...

களிப்பில் என்னை மிதக்கவைக்க உன் 
கொள்கையை உடைத்தவள் நீ... 

நான் துயில்கொள்ளும் வரை 
என்னுடன் உரையாடி உன் 
தூக்கத்தை தொலைத்தவள் நீ... 

எனக்கென செய்த இவற்றால் உன்னை
தோழியாய் பார்க்கவும் முடியாமல் 
காதலியாய் ஏற்கவும் முடியாமல் 
குழம்பி உன்னிடமே கேட்கிறேன்,
யாரடி நீ எனக்கு...  

Sunday, July 31, 2011

மறக்க முடியாமல் தவிக்கிறேன்...



முதற்முதலாய் உன்னிடம் 
பேச எண்ணித் தயங்கி 
பேசிய வார்த்தைகள்... 

உன்னைத் தாவணியில் 
பார்த்து மயங்கிய விழிகள்... 

செய்முறை வகுப்புகளில் 
உன்னருகில் இடம் தேடி 
வந்தமர்ந்த தருணங்கள்... 

நண்பர்களின் கைபேசியை கடன் வாங்கி,
குறுஞ்செய்தி மூலம் நாம் 
செய்த உரையாடல்கள்...  

இருவரும் போட்டி போட்டு
படித்து தேறிய தேர்வுகள்... 

உடற்நலம் பெறவேண்டி நீ 
எனக்காக செய்த பிராத்தனைகள்... 

என் வீட்டிற்கு வந்து 
ஒன்றாக உணவருந்தி 
விளையாடி மகிழ்ந்த மணித்துளிகள்... 

உன் நண்பனோடு நீ 
பேசுவதைக் கண்டு 
கோபம் கொண்ட நிமிடங்கள்... 

எதிர்பாராத நேரத்தில் 
உன் வீட்டிற்கு வந்து 
உன்னை இன்ப அதிர்ச்சியில் 
ஆழ்த்திய நொடிகள்... 

இப்படி உன்னால் என் 
மனதில் பதிந்த நினைவுகளையும், 

என் காதலை ஏற்க மறுத்து 
என்னுள் நீ ஏற்படுத்திய வலியையும்,

மறக்க எத்தனித்து முயற்சிக்கிறேன்,
மறக்க முடியாமல் தவிக்கிறேன்... 


Friday, July 29, 2011

Chennai - Delhi - Tirunelveli Trip

Journey or a trip is defined as a traveling from one place to another. Only a few journey will be a memorable one and lingers in your heart forever. The last trip of 14 days was one of my best trip i ever had and i thought of sharing the same with you guys.

    You guys know that i joined CPCL after completing my college. Since then, i never went for an external training. I believed that it was my bad luck but everything changed as the year 2010 was counting it days. I was very much delighted to hear that i was nominated for a week's training program at Delhi. My colleague Vhishnu, my room mate and my colleague Bala along with two managers were also nominated for the program. So we planned and geared up for the trip to Delhi.

    After celebrating Pongal festival in our hometown, we came back to Chennai on 15th Jan - 11 to begin our 36 hrs journey to Delhi in Tamilnadu express.

Laptop, books and playing cards were our options for time pass. Around 14:00 hrs of next day, we reached Nagpur the city famous for orange. From there the temperature started decreasing as our train proceeded towards north. After Nagpur, our train stopped at Itarsi, a city in Madhyapradesh. The temperature was around 15 DegC and itarsi is famous for Jalebi . If you guys happen to travel by train to Delhi, don't miss Jalebi here. The next stop was at Bhopal. Without knowing the temperature outside, i just stepped out and started to have a small walk in the platform. within minutes, my hands started shivering which made me to realise the temperature outside. Yes, the temperature was around 10 DegC and yet i enjoyed the climate over there as we don't get any opportunity to enjoy the same here in Chennai.

    Finally on 17-Jan-2011, we reached Nizamudin from where we went to our company guest house. We had one week training program at Gurgoan for which we travelled from our guest house to Gurgoan daily. I was really amazed with the infrastructure of Delhi. The most common car found in the roads of Delhi was Honda City & Civic The population of cars was more than two wheelers, in the roads of Delhi. In spite of such a cold weather ( 5 - 6 Deg C) , we didn't waste even a single evening staying at room. 


  One of the most memorable thing was the dinner we took in Moti Mahal, a restaurant in Chandini Chowk. They were the pioneers of Tandoori chicken and I bet you cant have a tastier chicken anywhere in the world. I suggest you guys to go to the restaurant if u have a chance.

     After five days of training, we planned for a local site seeing tour on Saturday. Unfortunately, because of Republic day celebration, we were not able to see Red fort and India Gate. Qutub Minar, Lotus Temple, Indira Gandhi's house, Nehru's house, Gandhi Samadhi and Lakshminarayanan temple were the places we visited. I have to mention a few words on Delhi Metro rail here. What a good plan!!! Not even a single passenger can travel without the token (ticket). Train was fully air-conditioned with automated doors. The train route map was indicated in each compartment with LED indicating the last and the next station to come. Apart from this, a voice announcement also informs the next station and the platform direction. On 23-Jan-2011, as we boarded the flight to Chennai, the first half of my trip came to an end.

    The next half started on the same day with a trip to Tirunelveli to attend my sister cum my best friend's marriage. This time i was accompanied by my friend Pradeep, vivek and his brother. I met vivek after a years time since he left to US to pursue his masters. Wat else you can expect when good friends meet each other after a long time. We chatted on our past, present and what not. I travelled around 3000 km in 24 hrs (From northern end to southern end) to reach Tirunelveli. After refreshing our self, we went to attend her marriage. I still remember the excitement on her face on seeing all of us together in her marriage.

         

    After attending her marriage, we planned to go to Papanasam waterfalls. My self along with my mom, sis (joined with them at the marriage) and with my friends went to the waterfall. We travelled in the same cab, that were used for shooting the shopping scene in the film Yaaradi Nee Mohini (Shopping Scene). After an hour  travel, we reached the falls. Since it was not a big waterfall, not so many people will come here. Added to our luck, no one was there at the time we went there. We enjoyed each and every moment under the falls. It gives u immense pleasure and joy when u meet your best friend after a long time and pain when the time comes to depart. From the waterfall, we went to a temple nearby from where i headed towards Trichy with my family while Vivek and Pradeep headed to Coimbatore bringing an end to the memorable trip.

P.S:

Sorry guys for posting it so early... :)

Thursday, July 28, 2011

தவிக்குதடி என் மனது



உன் பாதமலரைத் தீண்ட 
தாவி குதித்து வந்த அலைகள் 
மயங்கி விழுந்து திரும்பியதோ 
உன் ஸ்பரிசத்தால்... 

உன் திருமுகத்தைக் கண்டபின் 
அந்த நிலவும் புலப்படவில்லையடி
என் விழிகளுக்கு ...

நிலவில் மேடு பள்ளங்கள் உண்டு 
என செயற்கைக்கோள் செலுத்தி கண்டு 
பிடித்த மூடர்கள் என்னிடம் கேட்டிருந்தால் 
சொல்லிருப்பேனடி உன் 
கன்னத்தையும் அதில் விழும் 
குழியையும் காட்டி.. 

உன் கன்னத்தில் முத்தமிடத் தான் 
உன் செவிமடலில் தொங்கி 
துடியாய் துடிக்கிறதோ 
உன் காதணியின் வளையம்... 

வகுப்பறையில் நீ துயில்கொள்ளும் 
அழகை ரசிக்கவே தவறாது 
வந்தேனடி நான் கல்லூரிக்கு... 

கூந்தலுக்கு இயற்கையில் மனம் 
உண்டோ எனத் தெரியாதடி எனக்கு 
ஆனால் என் மனதை 
கட்டி இழுக்கும் விசைமட்டும் 
உள்ளதடி அதற்கு... 

உன் சொல் பேச்சைக்கேலாமல்
உன் முகத்தைக் காண தாவிகுதித்து 
வரும் முடியை நீ 
முறைத்துப் பார்கையில் என்
இதயம் உன்னிடம் 
வரத் துடிக்குதடி... 

உன் தலைமுடி கோதிவிடும் 
பேனாவாக மாறும் பாக்கியமாவது 
எனக்கு கிடைக்குமா என
ஏங்கி தவிக்குதடி 
என் மனது... 

Tuesday, July 26, 2011

என் பிறந்தநாள்...



துயிலெழும் போதே 
பெற்றோரின் ஆசியோடு 
இனிரோட்டியை வெட்டி, 


சகோதரியின் சேஷ்டையால்
பாலாடையை முகத்தில் தடவபெற்று 
ஆரவாரத்துடன் தொடங்கியது 
என் தாய் என்னால்
மறுபிறவி எடுத்த 
என் பிறந்தநாள்...  

நள்ளிரவு முதல் அழைப்புகளாலும்
புதிய குறுஞ்செய்தி பெறப்பட்டுள்ளது 
என அறிவித்தே சலித்துபோய் 
அணைந்துபோனது என் கைபேசி... 

நண்பர்களின் வாழ்த்துகளுக்கு 
நன்றி தெரிவித்து 
நான் அடைந்த மகிழ்ச்சியாலும்,

ஆதரவற்ற குழந்தைகளுக்கு 
இனிப்பு வழங்கையில்
அவர்களின் வாழ்த்தோடு 
சேர்ந்த புன்னகையாலும்,

மீண்டும் குழந்தையாய்
மாற்றிய பரிசுபொருட்களாலும்,

கேளிக்கை பூங்காவில் 
விளையாடிய போது 
அடைந்த குதூகலத்தாலும்,

எதிர்பார்த்த சிலரின் வாழ்த்துகளாலும்
எதிர்பாராத சிலரின் வாழ்த்துகளாலும்
நான் மகிழ்ச்சிக் கடலில் 
மூழ்கி இன்புற்றேன்... 

நாளின் முதற் நாழிகையில் 
இப்புவியில் கால் நூற்றாண்டு 
வாழ்ந்து எதை சாதித்தேன் 
என்றெண்ணிய நான், 

நாளின் கடைசி நாழிகையில் 
உணர்ந்தேன் என்னை நேசிக்கும் 
நண்பர்களையும் உறவினர்களையும் 
பெற்றதைவிட வேறேதும் 
சாதிக்க வேண்டுமோ என்று??? 

Tuesday, July 19, 2011

குட்டி குட்டி சந்தோஷங்கள்...




பேருந்து பயணத்தின் போது 
மண்வாசனை சுமந்து வரும் 
குளிர்ந்த தென்றல்... 

இரயில் பயணத்தின் போது 
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கேட்கும் 
மனதிற்கு இதமான பாடல்... 

மழைச் சாரலில் வாகனம் 
ஓட்டும் குதுகலம்... 

மழையில் நனைந்து வீட்டுக்கு செல்கையில் 
அம்மாவின் அடதத்லோடு சேர்ந்து 
தலை துவட்டிவிடும் பாசம்...

அம்மாவின் மடியில் தலை சாய்க்க 
உடன்பிறப்போடு போடும் சண்டை...

காலத்தால் பிரிந்த நண்பனோடு  
எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் சந்திப்பு...

வீட்டை சுத்தப்படுத்தையில் கிடைக்கும் 
ஒழித்து வைக்கப்பட்ட காதலியின் 
நினைவுப் பொக்கிஷங்கள்... 

பழைய புத்தகங்களின் நடுவில் 
வைத்த மயிரிறகுகள்...

பழைய புகைப்படத்தைக் காணும் போது 
உயிர்பெரும் புதைந்த நினைவுகள்...

இவையாவும் குட்டிக்குட்டி சந்தோஷங்களே... 
ஆனால் இவையே நம் வாழ்வை 
முழுமையாக்கும் சந்தோஷங்களே...

Friday, July 15, 2011

எது பக்தி???




வழியெங்கும் வேத வாசகங்களை 
சுவரொட்டிகளாய் ஓட்டுவதா??? 

துண்டு சீட்டுகளில் பிரசுரங்களை 
அச்சிட்டு வழங்குவதா??? 

வீதியெங்கும் தெய்வ விக்ரகங்களை 
தூக்கி செல்வதா???

அணைவரையும் இம்சைக்கும் படி 
ஒலிபெருக்கிகளில் தெய்வ 
பாடல்களை ஒலிக்கச்செய்வதா??? 

கூட்டம் கூட்டமாய் திரண்டு 
ஒன்றாக கோஷம் போடுவதா?? 

செல்வங்களை கொண்டு போய்
உண்டியலில் கொட்டுவதா?? 

புகழ் தேடி விளம்பரம் செய்யும் 
அற்ப மனிதனை வணங்குவதா?? 

தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் 
என இறைவன் கூறியதை மறந்து 
கோவிலை தேடி செல்வதா?? 

இல்லை.. நிச்சியமாக இல்லை... 

உன் உயிரைப்போல 
மற்ற உயிரை நேசிப்பதும்,

மற்றவர்களை மனித 
நேயத்துடன் பாவிப்பதும்,

அறநெறியில் வாழ்ந்து மனதை 
தூய்மையாக வைத்திருப்பதுமே
உண்மையான பக்தி... 

Monday, July 11, 2011

விருப்பத்தை நிறைவேற்றுவாயா???






அன்புத்தாயே...

சிறிது நேரம் சுமைதூக்க 
யோசிக்கும் இக்காலத்தில் 
பத்து மாதங்கள் உன்கருவில்
என்னை சுமந்தாய்... 

சிறிதும் கண்ணயராமல் 
என்னை கண்ணும் கருத்துமாய் 
பேணி வளர்த்தாய்...

குழந்தை பருவத்தில் நான் 
செய்த சேஷ்டைகளை 
எல்லாம் பொருத்துக்கொண்டாய்... 

பதின்பப் பருவத்தில் நான் 
செய்த தவறுகளை 
எல்லாம் திருத்தினாய்... 

மீசை முளைத்த காலத்தில் 
நான் உன்னை யேசித்தாலும்
அதைப் பொருட்டாது நேசித்து 
என்னை வழிநடத்தினாய்...

இளமைப் பருவத்தில் நான் 
குழம்பிய போதெல்லாம் 
என்னை தெளிவு படுத்தினாய்... 

திருமணப் பருவத்தில் என் 
விருப்பத்தை உணர்ந்து என் 
காதலியை கைபிடிக்க உன் 
கணவனையே எதிர்த்தாய்... 

என் துணைவிக்கும் உனக்கும் 
மனஸ்தாபம் ஏற்பட்டாலும் 
எனக்காக நீ விட்டுக்கொடுத்தாய்... 

என் குழந்தைகளை 
உன் குழந்தைகளை விட 
நீ பாசத்துடன் வளர்த்தாய்... 

எனது எல்லா விருப்பத்தையும் 
நிறைவேற்றிய நீ,
எல்லாப் பிறவிகளிலும் நான் 
உனக்கு மகனாகப் பிறக்கவேண்டும் 
என்ற விருப்பத்தை மட்டும் 
நீ நிறைவேற்றுவாயா??? 

Friday, July 8, 2011

பெண் விடுதலை


ஆண் வர்க்கமே...
 
நான் பிறந்தது முதல்,
பெண் பிள்ளை என்றால்
செலவு என்றெண்ணி
என்னை வெறுக்கிறாய்...
 
மழலை என்று கூட பாராமல்
உன் அந்தரங்க இச்சைகளுக்கு
என்னை இம்சை செய்கிறாய்...
 
பேருந்தில் பயணம் செய்யும்போதும்
என்னை தொல்லை செய்கிறாய்...
 
பொது இடங்களிலும் உனது விரசப்
பார்வைகளால் என் உடலை கூசவைக்கிறாய்...
 
சகோதரனோடோ தோழனோடோ
செல்கையில் எவ்வளவு
ஏளனத்தோடு பார்க்கிறாய்...
 
பெண் பாலின் விருப்பமில்லாமல்
விலங்குகள் தொடுவதில்லை,
ஆனால் நீயோ உன் பசிக்கு
என்னை சிதைக்கிறாய்....
 
பணியிடத்திலும் என் திறமைக்கு
கிடைக்க  வேண்டிய
பதவி உயர்வுக்கு
என் மானத்தை
விலை பேசுகிறாய்...
 
காதலென்னும் மாய வலையில்
என்னை சிக்கவைத்து
என்னை விலைபேசி விற்று
என் வாழ்வை சீரழிக்கிறாய்...
 
திருமணப் பருவத்தில்
திருமணச் சந்தையில்
என்னை விலை கொடுத்து விற்கிறாய்...
 
உனக்கு பணிவிடை செய்தும்
பிள்ளையை பெற்றுத்தரும்
எந்திரமாக மட்டும் நீ
என்னை பார்க்கிறாய்...
 
நிம்மதி தேடி கோவிலுக்கு
சென்றால் அங்கும் 
உன் அட்டகாசம் தான்... 
 
பெண்ணாகப் பிறந்தவொன்றே
நான் செய்த தவறோ???
 
எப்போது உன்னிடமிருந்து எனக்கு
விடுதலை கிட்டுமோ??

Tuesday, July 5, 2011

தொலைந்த காலங்கள்...


நண்பனே...
மாறிவரும் வாழ்க்கைச் சக்கரத்தில் 
எவ்வளவு தொலைந்த காலங்கள்??? 

பட்டம்பூச்சிகளைப் பிடித்து 
அவற்றிற்கு உணவு கொடுத்து, 
மீண்டும் விடுவித்து 
மகிழ்ந்த காலங்கள்... 

தட்டான் பூச்சிகலைப் 
பிடித்து அவற்றை 
எறும்புகளுக்கு இறையாய் 
போட்ட காலங்கள்... 

கூட்டாஞ்சோறு செய்து 
கூட்டாக உண்டு 
மகிழ்ந்த காலங்கள்... 

ஓடைகளில் மீன் பிடித்து 
அவற்றை வீட்டுக் கிணற்றில் 
வளர்த்த காலங்கள்...

மழை வேண்டி யாகம் என்று 
செய்தித்தாளில் படித்து நாம் 
யாகம் வளர்த்த காலங்கள்... 

குரங்கு பெடல் போட்டு 
சைக்கிள் பழகிய காலங்கள்...

காலை கிரிக்கெடில் தொடங்கி 
மாலை கண்ணாமூச்சி வரை 
விளையாடி களித்த காலங்கள்...

கிரிக்கெட் விளையாடி அண்டைவீட்டின்
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து 
ஓடி ஒளிந்த காலங்கள்...

மேடு பள்ளம் முற்புதர் என்று 
பாராமல் திருடன் போலீஸ் 
விளையாடி திரிந்த காலங்கள்...

குன்றினைத் தேடி வாழைத்தொப்புக்குள் 
சென்று வழித்தொலைந்து
தட்டுத் தடுமாறி வெளியேறிய காலங்கள்...

சின்னஞ்சிறு மனஸ்தாபங்கள் தோன்றினாலும் 
மீண்டும் சேர்ந்து விளையாடிய 
கள்ளங்கபடமற்ற காலங்கள்...

மீசை முளைத்த காலத்தில் 
பேருந்து படியில் நின்று 
பயணித்த காலங்கள்...

எதிர் பாலினர் மீதான 
ஈர்ப்பில் பேருந்துகளை 
துரத்திய காலங்கள்...

முதன்முதலாய் நங்கையிடம் பேச 
எண்ணித் தயங்கி நடுங்கிய காலங்கள்...

எல்லோரும் கூட்டாக தேர்வெழுதி 
தேர்ச்சி அடைந்த காலங்கள்...

இவையனைத்தும் கடந்து இன்று 
இயந்திரமாய் வாழும் காலம்... 

களிப்புடன் களிந்த வாரயிறுதி 
இன்று ஓய்வுடன் கழிக்கப்படுகின்றன...

தொலைந்த காலங்கள் திரும்பிராது எனினும் 
புதைந்த நினைவுகளுக்காவது 
உயிர்கொடுத்து இன்புருவோமே!!!  


Friday, July 1, 2011

என் உயிர் தோழி...



உன்னை முதற்முதலாய் பார்த்தபோது
எனது மனதிற்கு தோன்றவில்லை
நீ என் உயிர்த்தோழி ஆவாயென்று...

ஆனால் காலமென்னும் சிற்பி
என்னை செதுக்க உளியாய்
கொண்டது உன்னைத் தான்...

வகுப்பறையில் சகமாணவர்களாக
நாம் பழகியதை  
நட்பாக மாற்றியது,
தேர்வின்போது நீ
எனக்காக தந்த
உனது குறிப்பேடுகள்...

என் பிறந்தநாளன்று
எனக்கு முதல் வாழ்த்து தெரிவிக்க நள்ளிரவில்
என் கைபேசியில் அழைக்கையில்
உணர்ந்தேன் நம் நட்பின் ஆழத்தை...

வாலிப பருவத்தில் மங்கையின்
ஸ்பரிசத்தில் எழும் உணரச்சிகள்
நீ என்னை தொட்டு பேசும்போது,  
நான் உணர்ந்தேன் 
பாலினங்கள் கடந்த நம் நட்பை... 

 
சிறுவர் பூங்காவில் நாம்
சிறுவர்களாய் மாறி
ஊஞ்சலாடிய போது
உணர்ந்தேன் கள்ள கபடமற்ற நட்பை... 

வாலிபத்தில் நான் வழிமாறிய போதெல்லாம் 
என்னருகில் இருந்து நீ 
என்னை திருத்திய போதும்,  

எனக்குள் இருக்கும் குழப்பங்களை 
நான் கூறுமுன்னே அதையுணர்ந்து 
அதற்கான தீர்வையும் நீ கூறியபோதும், 

நேர்முகத் தேர்வில் நான் 
தேர்ச்சி அடையாத போதெல்லாம் 
எனக்கு ஆறுதல் கூறி 
என் தன்னம்பிக்கையை வளர்த்தபோதும்,
உணர்ந்தேன் நம் நட்பின் மகத்துவத்தை...  

உனக்கானத் துணைவனை நீ 
எனக்கு அறிமுகப்படுத்திய போது, 
அவருக்குண்டான ஐயத்தை போக்கி 
நம் நட்பின் பெருமையை உணர்த்தினாய்... 

உன் குழந்தைகளிடம் நான் 
உன்னுடைய நண்பனென்று 
அறிமுகப்படுத்தியபோது உணர்ந்தேன் 
நம் நட்பின் புனிதத்தை... 

பலப் பிறவிகள் எடுக்கவேண்டுமென்று 
இறைவன் என்னை சபித்தாலும், 
நீ என் தோழியாக 
அணைத்து பிறவிகளிலும் 
வேண்டுமென்ற வரமொன்றை மட்டும் 
யாசிப்பேனடி அவனிடம்!!!



Thursday, June 30, 2011

எப்போது திருந்தப்போகிறாயோ???




ஆறறிவு படைத்த
அறிவு ஜீவியே!!!

உன் படைப்புகளை எண்ணி
நான் வியப்படைந்தேன்!!!


பெருமையும் அடைந்தேன்...  
ஆனால் உன் படைப்புகள்,
என் படைப்புகளுக்கு
தீங்கு விழையும் போது
நான் வருத்தப்படுகிறேன்...


உனக்காக நான் படைத்த
ஓசான் காற்று படலத்தை
ஓட்டையாக்கி தந்தாய்...


சுதமானக் காற்றை
மாசுபடுத்தி மகிழ்ந்தாய்...


மரங்களை வெட்டி
தட்பவெட்பநிலையை மாற்றினாய்...


நிலத்தடி நீரை உரிந்து
நிம்மதி அடைந்தாய்...


செழுமை நிறைந்த நிலப்பரப்பை
சதுப்பு நிலமாக மாற்றினாய்...


தெளிந்த நீரோடைகளில் கழிவுகளை
கலந்து சாக்கடையாய் மாற்றினாய்...


பொறுமைக்குப் பெயர்பெற்ற என்னை
பெருமூச்சி விடவைத்தாய்...


ஆனால் என் பெருமூச்சு உன்
இனத்தார் பலரின்
இறுதி மூச்சாகியது...


என் தவறை உணர்ந்து
நான் வெட்கமுற்றேன்
வேதனையடைந்தேன்...


ஆனால் நீ எப்போது உன்
தவறை உணரப்போகிறாயோ!!!
எப்போது திருந்தப்போகிறாயோ!!!