எனது மனதிற்கு தோன்றவில்லை
நீ என் உயிர்த்தோழி ஆவாயென்று...
ஆனால் காலமென்னும் சிற்பி
என்னை செதுக்க உளியாய்
கொண்டது உன்னைத் தான்...
வகுப்பறையில் சகமாணவர்களாக
நாம் பழகியதை
நட்பாக மாற்றியது,
தேர்வின்போது நீ
எனக்காக தந்த
உனது குறிப்பேடுகள்...
என் பிறந்தநாளன்று
எனக்கு முதல் வாழ்த்து தெரிவிக்க நள்ளிரவில்
என் கைபேசியில் அழைக்கையில்
உணர்ந்தேன் நம் நட்பின் ஆழத்தை...
வாலிப பருவத்தில் மங்கையின்
ஸ்பரிசத்தில் எழும் உணரச்சிகள்
நீ என்னை தொட்டு பேசும்போது,
நான் உணர்ந்தேன்
பாலினங்கள் கடந்த நம் நட்பை...
சிறுவர் பூங்காவில் நாம்
சிறுவர்களாய் மாறி
ஊஞ்சலாடிய போது
உணர்ந்தேன் கள்ள கபடமற்ற நட்பை...
வாலிபத்தில் நான் வழிமாறிய போதெல்லாம்
என்னருகில் இருந்து நீ
என்னை திருத்திய போதும்,
எனக்குள் இருக்கும் குழப்பங்களை
நான் கூறுமுன்னே அதையுணர்ந்து
அதற்கான தீர்வையும் நீ கூறியபோதும்,
நேர்முகத் தேர்வில் நான்
தேர்ச்சி அடையாத போதெல்லாம்
எனக்கு ஆறுதல் கூறி
என் தன்னம்பிக்கையை வளர்த்தபோதும்,
உணர்ந்தேன் நம் நட்பின் மகத்துவத்தை...
உனக்கானத் துணைவனை நீ
எனக்கு அறிமுகப்படுத்திய போது,
அவருக்குண்டான ஐயத்தை போக்கி
நம் நட்பின் பெருமையை உணர்த்தினாய்...
உன் குழந்தைகளிடம் நான்
உன்னுடைய நண்பனென்று
அறிமுகப்படுத்தியபோது உணர்ந்தேன்
நம் நட்பின் புனிதத்தை...
பலப் பிறவிகள் எடுக்கவேண்டுமென்று
இறைவன் என்னை சபித்தாலும்,
நீ என் தோழியாக
அணைத்து பிறவிகளிலும்
வேண்டுமென்ற வரமொன்றை மட்டும்
யாசிப்பேனடி அவனிடம்!!!
No comments:
Post a Comment