Thursday, June 30, 2011

எப்போது திருந்தப்போகிறாயோ???




ஆறறிவு படைத்த
அறிவு ஜீவியே!!!

உன் படைப்புகளை எண்ணி
நான் வியப்படைந்தேன்!!!


பெருமையும் அடைந்தேன்...  
ஆனால் உன் படைப்புகள்,
என் படைப்புகளுக்கு
தீங்கு விழையும் போது
நான் வருத்தப்படுகிறேன்...


உனக்காக நான் படைத்த
ஓசான் காற்று படலத்தை
ஓட்டையாக்கி தந்தாய்...


சுதமானக் காற்றை
மாசுபடுத்தி மகிழ்ந்தாய்...


மரங்களை வெட்டி
தட்பவெட்பநிலையை மாற்றினாய்...


நிலத்தடி நீரை உரிந்து
நிம்மதி அடைந்தாய்...


செழுமை நிறைந்த நிலப்பரப்பை
சதுப்பு நிலமாக மாற்றினாய்...


தெளிந்த நீரோடைகளில் கழிவுகளை
கலந்து சாக்கடையாய் மாற்றினாய்...


பொறுமைக்குப் பெயர்பெற்ற என்னை
பெருமூச்சி விடவைத்தாய்...


ஆனால் என் பெருமூச்சு உன்
இனத்தார் பலரின்
இறுதி மூச்சாகியது...


என் தவறை உணர்ந்து
நான் வெட்கமுற்றேன்
வேதனையடைந்தேன்...


ஆனால் நீ எப்போது உன்
தவறை உணரப்போகிறாயோ!!!
எப்போது திருந்தப்போகிறாயோ!!! 

Tuesday, June 28, 2011

மாற்றங்கள்!!!

மனிதனே!!!



வழிப்போக்கர்கள் தங்கி செல்ல
திண்ணை அமைத்த நீ
இன்று உறவினர்களை
வரவேற்க மனமில்லாமல்
இருப்பது ஏன்???

பச்சைக் கம்பளி போர்த்தி
உலகுக்கே உணவு படைத்த நீ
அவற்றை இன்று கொங்கிறீற்று
கட்டிடங்களாக மாற்றித் தவிப்பது ஏன்???

வேற்று கிரகத்தில் மனிதன்
இருக்கிறான எனத்தேடும் நீ
உன் வீட்டின் அருகில் இருக்கும்
மனிதனைக் காண மறப்பது ஏன்???

வெற்று காகிதத்தை
சேர்க்க என்னும் நீ
உன் வீட்டில் பாசத்தை ஏன்
சேர்க்க மறுக்கிறாய்???

கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும்
உதாரணமாய் இருந்த நீ
இன்று விலங்கை விட
கீழ்த்தரமாக நடப்பது ஏன்???

புறாவின் உயிரைக் காக்க
உன் சதையை தந்த நீ
உன் சுயநலத்திற்காக உன் இனத்தாரின்
உயிரைக் குடிப்பது ஏன்???

உன் தேவைக்கு மிகுதியை
தானமாக தந்த நீ
இன்று பத்து தலைமுறைக்கு
பொருள் சேர்ப்பது ஏன்???

அனைத்திற்கும் மேலாக
ஆலையத்தின் புனிதத்தையும்
கடவுளின் பெயரையும் நீ
கலங்கப் படுத்துவது ஏன்???

ஓர் ஆயிரம் ஆண்டிற்குள் உன்னில்
எவ்வளவு மாற்றங்கள்!!!


Friday, June 24, 2011

தண்ணீரின் குமுறல்

மானிடனே!!!


உனக்காக என் கடற்வீட்டை விட்டொழித்து 

மேகமாக வடிவெடுத்து 

மலைகளால் தடுக்கப்பெற்று 

மழையாய் பொழிந்து 

நதியாய் உருவெடுத்து 

வழியெங்கும் உள்ள மூலிகைகளின் 

மருத்துவத்தை பெற்றுக்கொண்டு 

உன்னிடத்தில் வந்த 

என் தன்மையை தகர்த்து 

என் சிறப்பினை சிதைத்து 

உன் கழிவுகளை கலந்து

என்னை நிர்மூலமாக்கி

திருப்பி அனுப்புவதா உன் நியாயம்??? 

Thursday, June 23, 2011

எனது முதற்கவிதை

தேய்பிறை காலைப்பொழுது

ஆதவன் தனக்குற்றவளை தன்
ஆயிரம் பொற்கரங்களால் அழைக்கின்றானோ ???

காலமென்னும் தந்தையின்
கட்டுபாட்டை கடந்து தன்
காதலனைக் காண காத்து
நிற்கிறாளோ நிலாமகள் !!!

காதலர்களுக்குள் நடக்கும் ஊடலை
காணத்தான் முகிலில் மறைந்து
நிற்கிறதோ விண்மீன்கள் ???

இதையெல்லாம் ரசிக்ககூட நேரமில்லாமல்
எதைநோக்கி நீ ஓடுகிறாயோ மானிடா !!!