அன்புத்தாயே...
சிறிது நேரம் சுமைதூக்க
யோசிக்கும் இக்காலத்தில்
பத்து மாதங்கள் உன்கருவில்
என்னை சுமந்தாய்...
சிறிதும் கண்ணயராமல்
என்னை கண்ணும் கருத்துமாய்
பேணி வளர்த்தாய்...
குழந்தை பருவத்தில் நான்
செய்த சேஷ்டைகளை
எல்லாம் பொருத்துக்கொண்டாய்...
பதின்பப் பருவத்தில் நான்
செய்த தவறுகளை
எல்லாம் திருத்தினாய்...
மீசை முளைத்த காலத்தில்
நான் உன்னை யேசித்தாலும்
அதைப் பொருட்டாது நேசித்து
என்னை வழிநடத்தினாய்...
இளமைப் பருவத்தில் நான்
குழம்பிய போதெல்லாம்
என்னை தெளிவு படுத்தினாய்...
திருமணப் பருவத்தில் என்
விருப்பத்தை உணர்ந்து என்
காதலியை கைபிடிக்க உன்
கணவனையே எதிர்த்தாய்...
என் துணைவிக்கும் உனக்கும்
மனஸ்தாபம் ஏற்பட்டாலும்
எனக்காக நீ விட்டுக்கொடுத்தாய்...
என் குழந்தைகளை
உன் குழந்தைகளை விட
நீ பாசத்துடன் வளர்த்தாய்...
எனது எல்லா விருப்பத்தையும்
நிறைவேற்றிய நீ,
எல்லாப் பிறவிகளிலும் நான்
உனக்கு மகனாகப் பிறக்கவேண்டும்
என்ற விருப்பத்தை மட்டும்
நீ நிறைவேற்றுவாயா???

Too good :)
ReplyDeleteGoyyale enna achu vara vara over peelings ah irukuthu..
ReplyDelete