நண்பனே...
மாறிவரும் வாழ்க்கைச் சக்கரத்தில்
எவ்வளவு தொலைந்த காலங்கள்???
பட்டம்பூச்சிகளைப் பிடித்து
அவற்றிற்கு உணவு கொடுத்து,
மீண்டும் விடுவித்து
மகிழ்ந்த காலங்கள்...
தட்டான் பூச்சிகலைப்
பிடித்து அவற்றை
எறும்புகளுக்கு இறையாய்
போட்ட காலங்கள்...
கூட்டாஞ்சோறு செய்து
கூட்டாக உண்டு
மகிழ்ந்த காலங்கள்...
ஓடைகளில் மீன் பிடித்து
அவற்றை வீட்டுக் கிணற்றில்
வளர்த்த காலங்கள்...
மழை வேண்டி யாகம் என்று
செய்தித்தாளில் படித்து நாம்
யாகம் வளர்த்த காலங்கள்...
குரங்கு பெடல் போட்டு
சைக்கிள் பழகிய காலங்கள்...
காலை கிரிக்கெடில் தொடங்கி
மாலை கண்ணாமூச்சி வரை
விளையாடி களித்த காலங்கள்...
கிரிக்கெட் விளையாடி அண்டைவீட்டின்
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து
ஓடி ஒளிந்த காலங்கள்...
மேடு பள்ளம் முற்புதர் என்று
பாராமல் திருடன் போலீஸ்
விளையாடி திரிந்த காலங்கள்...
குன்றினைத் தேடி வாழைத்தொப்புக்குள்
சென்று வழித்தொலைந்து
தட்டுத் தடுமாறி வெளியேறிய காலங்கள்...
சின்னஞ்சிறு மனஸ்தாபங்கள் தோன்றினாலும்
மீண்டும் சேர்ந்து விளையாடிய
கள்ளங்கபடமற்ற காலங்கள்...
மீசை முளைத்த காலத்தில்
பேருந்து படியில் நின்று
பயணித்த காலங்கள்...
எதிர் பாலினர் மீதான
ஈர்ப்பில் பேருந்துகளை
துரத்திய காலங்கள்...
முதன்முதலாய் நங்கையிடம் பேச
எண்ணித் தயங்கி நடுங்கிய காலங்கள்...
எல்லோரும் கூட்டாக தேர்வெழுதி
தேர்ச்சி அடைந்த காலங்கள்...
இவையனைத்தும் கடந்து இன்று
இயந்திரமாய் வாழும் காலம்...
களிப்புடன் களிந்த வாரயிறுதி
இன்று ஓய்வுடன் கழிக்கப்படுகின்றன...
தொலைந்த காலங்கள் திரும்பிராது எனினும்
புதைந்த நினைவுகளுக்காவது
உயிர்கொடுத்து இன்புருவோமே!!!

gud one actually..keep writing
ReplyDeleteGreat :) developin into a good poet :)
ReplyDeleteReminding me of our good old childhood days bro.. Bayangarama elutha arambichuta.. that too in a short time.. unakullayum ennavo irunthiruku paren..:)
ReplyDelete