கண்ணனுக்கு எட்டா தூரத்தில்
இலக்கை கண்டறிதலிலும்,
முந்திக்கொண்டு முன்னேறி
இலக்கை அடைவதிலும்,
செவிகள் கேட்க அச்சப்படும்
வார்த்தையோடு வாதிடுவதிலும்,
காயங்கள் ஏற்படுத்தும்
கலகங்களிலும்,
போராட்டம் என்பதோ ஒன்று தான்...
போராடுமிடம் தான் வேறு...
பெண்களுக்கோ அது
தண்ணீர் ஊர்திக்குப்பின் ...
ஆண்களுக்கோ அது
மதுபான கடைக்குமுன்...
No comments:
Post a Comment