Monday, June 17, 2013

பொறாமை




அழகே...

பிம்பத்திற்கும் பொறாமையுண்டு
எனதறிந்துக் கொண்டேனடி,
கண்ணாடியில் உன்
பிம்பத்தைக் கண்டபோது...


Thursday, June 6, 2013

காதலிக்கிறேனடி உன்னை....





பெண்ணே...

உன் கூந்தல் உதிரும் 
முடியை சேகரிக்குறேனடி,
மயிலிறகு வீட்டில் இருப்பது
நல்லது என அம்மா கூறியதால்...


தினமும் உன்முகம் பார்த்தே
துயில் எழுகிறேனடி,
மலர்ந்த மலரைப் பார்க்க
அன்றைய தினம்
இனிதாகும் என பாட்டி சொன்னதால்..


உன் கொலுசின் இசையை கேட்கவே
உனது இல்லத்தை சுற்றிவருகிறேனடி,
காலையில் இன்னிசை கேட்க
மனதிற்கு அமைதி தரும் என தந்தை அறிவுறுத்தியதால்...


ஆனால் யார் சொன்னதைக் கேட்டு
உன்னை காதலிக்கிறேனடி ???

ஆம்...


எனக்காக பிறந்த தேவதை அவள்  என
என் மனது உன்னைக் காட்டியதால்...



Thursday, September 13, 2012

போராட்டம்
















கண்ணனுக்கு எட்டா தூரத்தில் 
இலக்கை கண்டறிதலிலும்,

முந்திக்கொண்டு முன்னேறி
இலக்கை அடைவதிலும்,

செவிகள் கேட்க அச்சப்படும்
வார்த்தையோடு வாதிடுவதிலும்,

காயங்கள் ஏற்படுத்தும்
கலகங்களிலும்,

போராட்டம்  என்பதோ ஒன்று தான்...
போராடுமிடம்  தான் வேறு...

பெண்களுக்கோ அது
தண்ணீர் ஊர்திக்குப்பின் ...

ஆண்களுக்கோ அது
மதுபான கடைக்குமுன்...